Posts

Showing posts from November, 2020

Kaivalya Navanitham 1(41-60)

Image
  கைவல்ய நவநீதம் - தத்துவ விளக்கப் படலம் பாடல் : 41 தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும், ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா, கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே . பொருள்: தூடண தமத்தில் வந்த =   நிந்திக்கத்தக்க தாமஸ குண(ப்ரதான) மாயையிலிருந்து உண்டான, தோற்றமாம் சத்தி செய்யும் =   விக்ஷேபம் ஆகிய சக்தி உண்டாக்கும், ஏடணை விகாரம் சொன்னீர் =   இச்சா ரூபமான (இப்பிரபஞ்சத்தின்) தோற்றத்தை அருளிச் செய்தீர், இரண்டு சத்திகள் என் றீரே =   (முன்னர் தாமஸ குணம்) இரண்டு சக்திகளாய்ப் பிரிந்து தோன்றும் என்று சொன்னீர் ஆதலால்,   மூடலாம் சத்தி செய்யும் மோகமும் =   ஆவரணம் எனும் சக்தி செய்யும் மயக்கத்தையும், கேடற =   என் துன்பம் விலகுமாறு, ஐயா குருவே =   என்‌ தந்தையாகிய குருவே,  என்ன =   (சொல்லும்) என்று சீடன் கேட்க, கிருபையோடு அருள் செய்வாரே =   ஸற்குருவானவர் கருணையோடு அருளிச்செய்தார். பாடல் 42 தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யெ...